பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியம் பெரியநெசலூர்  கிராமத்தில்
தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர்கள் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் மற்றும் இந்திய கிராமப்புற பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இரண்டு நாள் கிராமிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்
 நடைபெற்றது .இந்த பயிற்சி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார்   நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பொதுமக்கள் கலந்து கொண்டார் மேலும் தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி  வாரியத்தின் மூத்த கல்வி அதிகாரி சந்திரன்  அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டுமான  தொழிலாளர் நல வாரிய சங்கத்தின் தலைவர்  ஜவகர்லால் நேரு அவர்களும் மீனாட்சி கட்டுமான  சங்கத்தின் நிர்வாகி செல்வம் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டுமான சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும் மாவட்ட செயலாளர் திரு மேகராஜ் அவர்களும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கவிதா அஞ்சலை பிரியா போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  இந்த முகாமில் கோவிட்19 பற்றியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சட்டம் பற்றியும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் இரண்டு நாளுக்கும் சேர்த்து தலா ரூபாய் 500 பணம் செலுத்தப்படும் என்பது இந்த பயிற்சியின் சிறப்பம்சமாகும்.
சு.வேலன்
வேப்பூர் தாலுக்கா நிரூபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613