தையற்கலை தொழிலாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்

 

 

 

 

வந்தவாசியில்,மாவட்ட தையற்கலை தொழிலாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்-மாநில சம்மேளன பொதுச்செயலாளர் ஐடாஹெலன் பங்கேற்பு

 

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மாவட்ட தையல் தொ ழிலாளர் சங்க சிறப்பு கூட்டம் மாவட்டத் தலைவர் மேரி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர் வீரபத்திரன் துவக்க உரையாற்றினார்

 

 

கூட்டத்தில், கலந்து கொண்ட மாநில சம்மேளன பொதுச்செயலாளர் ஐடா ஹெலன் தையல் கலைஞர்கள் சங்கமாக அணிதிரள வேண்டிய அவசியம் குறித்தும்,அதனால் நிகழும் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்தும் பேசினார்.குறிப்பாக,பெண் தையல் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்வதன்மூலம் சுயமாக சொந்தக்காலில் நிற்கும் சூழ்நிலை உருவாவதையும் எடுத்துரைத்தார்.

 

தையல் கலை தொழிலாளர் சங்கம் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாவட்ட சமூக நலத்துறையில் இலவச தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.தையல் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் நிபந்தனையின்றி தொழிற்கடன் வழங்கிட வேண்டும். தையல் தொழிலாளர்கள் அடங்கிய மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு 5 லட்சம் கடனுதவி வழங்கிட வேண்டும். நவம்பர் 26ஆம் தேதி தேசம் முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் தையல் தொழிலாளர்கள் தையல் கடைகளை அடைத்து பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த சிறப்பு கூட்டத்தில்,தையல் சங்க தலைவர் ஜீனத், மாவட்ட பொருளாளர் மணி, சங்க பொருளாளர் அப்துல் காதர்,சிஐடியு மாவட்ட பொருளாளர் தண்டபாணி மற்றும் 150 பெண் தையல் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment