ஊராட்சி தூய்மை காவலர்கள் சங்க கூட்டம்-மாவட்ட தலைவர்மாவட்ட தலைவர் கோவிந்தசாமி பங்கேற்பு

 

 

 

 

வந்தவாசியில் ஊராட்சி தூய்மை காவலர்கள் சங்க கூட்டம்-மாவட்ட தலைவர்மாவட்ட தலைவர் கோவிந்தசாமி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி விசைப் பம்பு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி கலந்து கொண்டு தூய்மை காவலர்களின் தற்போதைய பணிநிலைமை குறித்தும்,அவர்களின் பணி முன்னேற்ற வாழ்வாதார மேம்பாட்டு நிலை குறித்தும் பேசினார்.

இந்த கூட்டத்தில், அனைத்து தூய்மை காவலர்களுக்கும் முறையான பணியமைப்பு செய்யவேண்டும்.
பணிப்பதிவேடு துவக்கப்பட வேண்டும்,குழு காப்பீடு திட்டத்தில் சேர்ந்திட வேண்டும்.ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.16.3.2020 ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்த ரூபாய் 1000 ஊதிய உயர்வு அரசாணையை வழங்க வேண்டும்,மாத ஊதியம் VPRC மூலம் வழங்காமல் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும்,1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் தூய்மை காவலர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூபாய் 3000 வழங்க முயற்சிக்க வேண்டும் தூய்மை காவலர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளருக்கு வழங்கக்கூடிய கையுறை, முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் , மாவட்ட பொதுச் செயலாளர் மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் கண்ணன், ஒன்றிய பொருளாளர் குப்பன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

Related posts

Leave a Comment