Home

ஆட்டோ கடத்திய வழக்கில் 3 பேர் கைது

 

 

 

வந்தவாசியில், முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்திய வழக்கில் 3 பேர் கைது

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தான். ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஆட்டோ சங்க தலைவரான நஜீர்கான் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 ந்தேதி இரவு நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மஸ்தானி டம் உத்தரமேரூர் செல்ல வேண்டும் என அழைத்துள்ளனர் அதன்பேரில் அவர்களை ஏற்றிக்கொண்டு மங்கநல்லூர் கூட்டுச் சாலை அருகே சென்றபோது திடீரென ஆட்டோவில் இருந்த இரண்டு வாலிபர்களும் மஸ்தானை, ஆட்டோ சங்க தலைவரிடமா மோதுகிறாய் என மிரட்டி, மது பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரி தாக்கி விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றுள்ளனர்.

 

படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் வந்தவாசி டிஎஸ்பி தங்கராமன் வடக்கு இன்ஸ்பெக்டர் குமார் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே தனிப்படை போலீசார் நேற்றிரவு காஞ்சிபுரம் – விளாங்காடு ரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த இரண்டு பேரை விசாரித்தனர் அவர்கள், ஆட்டோ சங்க தலைவர் நஜீர்கான் கேட்டுக் கொண்டதற்காக, மஸ்தானை தாக்கிவிட்டு அவரது ஆட்டோவை கடத்தியதாககூறியுள்ளனர்.இதையடுத்து, வந்தவாசி கோட்டைக்குள் 3 வது தெருவை சேர்ந்த, அம்மா உணவகம் எதிரே உள்ள ஆட்டோ சங்க தலைவர் நஜீீீர்கான் , காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த தரணிதரன்,காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *