வந்தவாசி அடுத்த மழையூர் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆய்வு – 

வந்தவாசி அடுத்த மழையூர் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆய்வு –

 

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூரில் உள்ள இந்தியன் வங்கி பணிகளை மண்டல பொது மேலாளர் மூர்த்தி ஆய்வு செய்தார். பிறகு வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் பொதுத்துறை நிறுவனங்களை விட இந்தியன் வங்கியில் கடன் உதவி வழங்கப்படுகிறது . சிறு குறு நடுத்தர வியாபாரிகளுக்கான கடன் சாலையோர வியாபாரிகளுக்கன பாரதப்பிரதமர் திட்டத்தின்படி கடனுதவிபத்தாயிரம் வரை வழங்கப்படுகிறது . இதுதவிர அடல் பென்சன் யோஜனா என்ற திட்டமும் ஊக்குவிக்கப்படுகிறது பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கிசான் கடன் திட்டம் , மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . இதனடிப்படையில் கடந்த வாரம் 10 குழுக்களுக்கு உடனடி கடனுதவி இந்த வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது . பண்டிகை தினங்களை முன்னிட்டு சிறப்பு கடன் உதவியாக கார் கடன் சம்பளதாரர்களுக்கு கடன் வீட்டுக்கடன் முதலியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதாகவும் மூர்த்தி தெரிவித்தார் குறிப்பாக இந்த வங்கியில் ரிசர்வ் வங்கி அறிவுரையின்படி அறிக்கைகள் வரும்போதெல்லாம் வங்கிக் கடனுக்காக மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார் வங்கியின் சிறப்பான செயல்பாட்டிற்காக விருது அழைக்கப்பட்டதாகவும் மண்டல மேலாளர் மூர்த்தி வாடிக்கையாளர்களிடம் பேசும்பொழுது தெரிவித்தார் . அப்போது மழையூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராஜேந்திரபிரசாத் ரெட்டி மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Related posts

Leave a Comment