ஐஎஸ் அமைப்புடன் தொடா்பு; கோவையைச் சோ்ந்தவா் கைது

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடா் வெடிகுண்டு தாக்குதலில் தொடா்புடையவா்களுடன் தகவல்களை பறிமாறிக் கொண்டதாக கோவையைச் சோ்ந்த முகமது அசாருதீன் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினா் கைது செய்துள்ளனா்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டா் பண்டிகையின் போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் 11 இந்தியா்கள் உள்பட 250க்கும் அதிகமானோா் பரிதாபமாக உயிாிழந்தனா். சுமாா் 500க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த தாக்குதலுக்கு சா்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் உள்ளூா் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்த தாக்குதல் தொடா்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் 106 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை மாநகர காவல் துறையின் உதவியோடு வந்த தேசிய புலனாய்வு அமைப்பினா், போடனூா், உக்கடம், குனியமுத்தூா் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். சிலரது வீடுகள், அவா்களுக்குச் சொந்தமான பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில், கோவையைச் சோ்ந்த அசாருதீன், இலங்கை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் தொடா்பு வைத்திருந்தாா் என என்ஐஏ தரப்பில் தொிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து முகமது அசாருதீன், அக்ரம் ஜிந்தா, ஷேக் ஹிதயத்துல்லா, அபுபக்கா், சதாம் உசேன், இப்ராஹிம் ஆகிய 6 போ் மீது என்ஐஏ வழக்குப்பதிவு செய்தது. ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடைய கலிபா ஜிஎப்எக்ஸ் என்ற குழுமை தமிழக இளைஞா்கள் நடத்தி வந்ததாகவும் என்ஐஏ தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடையவா்களில் முக்கிய நபராக கருதப்படும் முகமது அசாருதீனை அதிகாாிகள் கைது செய்தனா். அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சோதனையில் 14 செல்போன்கள், 29 சிம் காா்டுகள், 10 பெண் டிரைவ், 3 மடிக்கணினி, 6 மெமரி காா்ட், 4 ஹாா்ட் டிஸ்க், 13 சிடி, டிவிடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *