பாஜக மகளிரணி சார்பில் தலைவர் திருமாவளவனை கண்டித்து

கோவையில் பாஜக மகளிரணி சார்பில் தலைவர் திருமாவளவனை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் உருவ பொம்மைகளை செருப்பால் அடித்து எரிக்க முயன்றதால் பரபரப்பு : காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு

 

மனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டதாக கடும் எதிர்ப்புகள் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் திருமாவளவன் பேசியதற்கு எதிர்வினையாற்றும் வருகிறார்கள். இந்த விவகாரத்தில் திருமாவளாவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கையில் கங்கண கயிறு கட்டிக் கொண்டு இந்து பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவனை கைது செய்யக் கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அண்ணாமலை, கனகசபாபதி, மாவட்ட தலைவர் நந்த குமார் உள்ளிட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு அவரது உருவப் படங்களை செருப்பால் அடித்து உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. முன்னதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது தவறு எனவும் தொடர்ந்து இந்து மதத்தை திருமாவளவன் இழிவுபடுத்தி வருவதாகவும் கூறினார். எந்த விதமான இந்து தர்ம நூலிலும் திருமாவளவன் சொன்ன கருத்துகள் சொல்லப்படவில்லை எனவும் ஆங்கிலேயர்கள் மதமாற்றம் செய்ய எழுதிய நூலில் இருப்பதை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் எனவும் இக்கருத்துக்களை இந்து தர்மம் ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். 2016 க்கு பிறகு பாஜக மிகப்பெரிய சக்தியாக வருவதை விரும்பாமல் குறி வைத்து பாஜக மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும்

தமிழக பெண்களின் கோபத்தை பாஜக பிரதிபலிப்பதாகவும் கூறியவர் குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது வேதனையளிக்கிறது என்றார். 2021 தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் பாரதிய ஜனதா எந்த மதத்திற்கும் எதிரான கட்சி இல்லை என்றும் தெரிவித்தார். மனு ஸ்மிருதி விவாதம் செய்யும் விஷயம் அல்ல எனவும் இவர்கள் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை எனவும் கூறினர். இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகமாக்கியுள்ளதாக தெரிவித்த அவர் திருமாவளவனை பாராளுமன்ற உறுப்பினர் என்று பார்க்காமல் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

Leave a Comment