தாராபுரத்தில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டின் தொடக்க விழாவானது கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டின் தொடக்க விழாவானது கொண்டாடப்பட்டது. இதில் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுக கட்சியானது எம்ஜிஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது எம்ஜிஆரின் மறைவுக்குப்பின் ஜெயலலிதா அவர்களால் சிறப்பாக கொண்டு செல்லப்பட்டது அதிமுக வானது தமிழகத்தில் 29 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

தற்போது அதிமுகவின் 49 ஆம் ஆண்டின் துவக்க விழாவானது தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடவும் மேலும் எதிர் வர இருக்கின்ற 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டாக நேற்று கட்சித் தொண்டர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

தாராபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் தலைமை வகித்தார் இதில் தாராபுரம் நகர தலைவரான டிடி காமராஜ் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான என் எஸ் நடராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்,

Related posts

Leave a Comment