தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

 

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்ணிபிரான் காலனியில் நட்சத்திர ஹோட்டலில் தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

IDTR எனப்படும் ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன மானது மிகப்பெரிய அளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதூர் என்னும் இடத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் செயல்பாடுகள் ஆனது தமிழக அரசின் ஒத்துழைப்போடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமானது ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்துள்ள உரிமையாளர்களின் வாழ்வாதாரம் ஆனது கணிசமான முறையில் உயரக்கூடும் என்று தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் கூட்டமைப்பின் தலைவரான சண்முகம் அவர்கள் தெரிவித்தார்.

மேலும்ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை புதிதாக துவங்க இருக்கும் உரிமையாளர்களுக்கும் இந்த ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமானது மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்.

இந்த ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகளானது குழந்தைகள் சாலைகளில் கவனமாக செல்வதற்கான பயிற்சி லைட் மோட்டார் வெகிக்கில் எனப்படும் இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி ஓட்டுனர் பயிற்சி மற்றும் வாகன பயிற்சி என்று பலவிதமான பயிற்சிகளை இந்த நிறுவனமானது கற்றுக் கொடுக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி கூட்டமைப்பின் செயலாளர் ராஜாராமன் மற்றும் பொருளாளர் மீரா சண்முகம் துணைத்தலைவர் மஞ்சு ராஜேந்திரன் திருப்பூரின் தலைவர் தேவி பவளக்கொடி மற்றும் தாராபுரம் ராகவேந்திரா ஓட்டுனர் பயிற்சி பள்ளியும் கலந்து கொண்டது.
வரவேற்புரை கண்மணி மோகன் ராஜ் அவர்கள் வழங்கினார்.

Related posts

Leave a Comment