தாராபுரத்தில் புதிய கட்சி துவக்க விழா

 

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய கட்சி துவக்க விழா புறவழிச்சாலையில் உள்ள கந்த விலாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

 

தாராபுரத்தில் “புதிய பார்வை அணி” என்னும் கட்சி துவக்க விழாவானது தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அறிமுகம் செய்யும் விதமாக நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளரையும் மற்றும் துணை முதல்வர் வேட்பாளரையும் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப் படுத்தினர். இந்த விழாவானது S. யாக்கோபு மாநில அமைப்பு செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக க.சக்திவேல் அவர்களையும் துணை முதல்வர் வேட்பாளராக M.L.ரவி மற்றும் DR. வீராசிதம்பரம் ஆகியோர்களை தேர்வு செய்த நபர்களாக அறிமுகம் செய்து வைத்தனர்

 

மேலும் இக்கட்சியின் 120 வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டனர் லஞ்ச மற்ற அரசு அலுவலகங்களை உருவாக்குவதும் ஊழலற்ற ஆட்சியை தர வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றினர்.

Related posts

Leave a Comment