நல்லறம் அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா

நல்லறம் அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா

கோவை. செப.

மறைந்த அறிஞர் ஆண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆணைக்கிணங்க 93A-டிவிசன் சார்பாக அதன் வட்ட கழக செயலாளர் எஸ்.ஜெகதீஸ் ஏற்பாட்டின் பேரில் அண்ணா 112-ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணாவின் திரு உருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புடன் மதிய உணவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் டிவிசன் செயலாளர் எஸ். ஜெகதீஸ், அறநிலையத்துறை தலைவர் ஈ.கே.பழனிச்சாமி, மற்றும் கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தன்ர்.

Related posts

Leave a Comment