காற்றாலை நிறுவனமானது சட்டவிரோதமாக எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மேற்படி மின் வழிப்பாதை அமைத்து வருகிறது.

 

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம் இதில் வடுகபாளையம் கிராமம் இச்சிப்பட்டியில் உள்ள காமேஸா என்ற தனியார் காற்றாலை நிறுவனத்தின் மின் நிலையத்தில் இருந்து வடமேற்க்கே உள்ள ராசிபாளையம் தமிழக அரசு மின் வாரி மின் நிலையத்தை இணைக்கும் விதமாக மேற்படி காமேஸா காற்றாலைநிறுவனம் உயர் மின் கோபுரம் அமைத்து மின் வழி பாதை அமைத்து வருகிறது. இதில் என்னவென்றால் கொழுமங்குழி கிராமம் புல எண்.545 என்ற பூமியிலும் மின் கோபுரம் அமைத்துள்ளது மேற்படி இந்த பூமியானது தூரம்பாடி குலமாணிக்கேஸ்வரன் கோவிலுக்கு பாத்தியப்பட்டு உதவி ஆணையர் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை கோவை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு இருக்கும் நிலையில் மேற்படி காமேஸா என்ற தனியார் காற்றாலை நிறுவனமானது சட்டவிரோதமாக எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மேற்படி மின் வழிப்பாதை அமைத்து வருகிறது.

இதில் மேற்படி இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூரம்பாடி குலமாணிக்கேஸ்வரன் கோயிலுக்கு சேர்ந்த கொழுமங்குழி கிராமம் புல எண்.545-ல் சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் இல்லாமல் உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது ஆகவே இதற்க்கு சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்படி புல எண்.545-ல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் உயர் மின் அழுத்த மின் கோபுரத்தை அப்புரப்படுத்த வேண்டுமாய் இதன் மூலம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

Related posts

Leave a Comment