4 ம் ஆண்டு கைத்தறி தினம்

4 ம் ஆண்டு கைத்தறி தினம்

கோவை. ஆகஸ்ட்7-
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் பல்வேறு விழாக்கள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் மக்கள் சேவை மையமும், ட்ரீம் ஜோன் நிறுவனமும் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி அணிவகுப்பு போட்டியை ஒவ்வொரு நடத்திக் கொண்டு வருகிறது.

4வது ஆண்டாக கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி அணிவகுப்பு போட்டி, கோவை பீளமேடு மசகாளிபாளையம் சாலையிலுள்ள வணிக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மக்கள் சேவை மையம் நிறுவனரும், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுஜ்ரிதா கலந்து கொண்டார். நடுவராக ட்ரீம் ஜோன் ஜான் பீட்டர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கைத்தறி அணிவகுப்பு போட்டி இறுதியில் கைத்தறி மகாராணி மற்றும் மகாராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த இறுதி போட்டியில் பி.எஸ்.ஜி, அவினாசிலிங்கம், என்.ஜி.பி, இந்துஸ்தான் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கைத்தறி மகாராணியாக நேரு கல்லூரியை சேர்ந்த சுஷ்மா முதலிடமும், அவினாசிவிங்கம் கல்லூரியை சேர்ந்த ரோஷினி இரண்டாமிடமும், பி.எஸ்.ஜி கல்லூரியைச் சேர்ந்த அன்னை பெசன்ட் மூன்றாம் இடமும் பிடித்தனர். இதேபோல் கைத்தறி மகாராஜாவாக இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த விஜய பரணிதரன், அரசு கல்லூரியைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், ராமகிருஷ்ணர் சேர்ந்த அனீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் சேவை மைய நிறுவனர் வானதி சீனிவாசன் பரிசும், சான்றிதழும் வழங்கினார். தொடர்ந்த அவர் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்தவும், நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், நம் அடையாளத்தையும் காட்டக் கூடிய மிக முக்கியமான துறையை . இளைய சமுதாயத்தினரிடம் பிரபல படுத்தவும்,அதில் அவர்களை ஈடுபடுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்த பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment