அதிமுக தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் பாஜகவில் இணைந்தார்

அதிமுக தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் பாஜகவில் இணைந்தார்

தாராபுரம். ஆக.7-

தாராபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் அணி ஆலோசனைக்கூட்டத்தில் அண்ணா திமுக கட்சியிலிருந்து விலகி தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் ரவி பாஜக விவசாயி அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.அவரோடு 50-க்கும் மேற்பட்டோரும் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
ஒன்றிய கவுன்சிலர் ரவி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான காரணத்தைக்கூறும்போது பெரியார்சிலை மீது காவிச்சாயம் ஊற்றியவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்தது தமிழக அரசு.

ஆனால் கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பர்கூட்டத்திற்கு எதிராக தமிழக முதல்வர் சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. திராவிடம் என்ற பொய் மாயையில் இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிவிட்டனர்.
இந்தியாவை சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கும் பாஜக தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்கும் சக்தி படைத்தது.எனவே பாஜகவை வலுப்படுத்த என்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டேன்.
கிராமம்,கிராமமாக சுற்றுப்பயணம் செய்து பாஜகவை வலுப்படுத்துவேன் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பாஜகவின் செய்தி தொடர்பாளருமான S.K.கார்வேந்தன் முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ருத்ரகுமார் தலைமை வகித்தார்.மாநில பொருளாளர் பார்த்தசாரதி,விவசாயி அணி பொதுச்செயலாளர் விஜயராகவன்,மாநில செயலாளர் நடராஜ், மாவட்ட தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட மாநில,மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

Related posts

Leave a Comment