திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலை ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா செய்தும் மற்றும் வே.கள்ளிப்பாளையம் ஊராட்சி ஜெயந்தி நகர் ஏடி காலனி பகுதியில் *ரூ.7.13 இலட்சம் மதிப்பீட்டில்* பேவர் பிளாக் தளம் அமைத்தல் மற்றும் வே.கள்ளிப்பாளையம் ஓடையில் *ரூ.24.71 இலட்சம் மதிப்பீட்டில்* தடுப்பணை கட்ட *பூமி பூஜை* செய்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. *கரைப்புதூர் A.நடராஜன் MLA* அவர்கள் பணிகளை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், பிரியா, பொறியாளர் ரங்கசாமி, ஒன்றிய கழகச் செயலாளர் S.சிவாச்சலம், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி சம்பத்குமார், முன்னாள் வைஸ் சேர்மன் கோபாலகிருஷ்ணன், மோகன்ராஜ், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், சொசைட்டி துணைத் தலைவர் ராஜேந்திரன், பெருந்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ராஜேஷ், ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேனாதிபதி, சித்ரா, ஜெகதீஷ், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சொசைட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்