விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்

 

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆவணத் தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆவுடை யானை பெரியகுளம் புதுக்குளம் அண்ணா குளம் போன்ற குளங்கள் குடிமராத்து பணி நடைபெறாமல் உள்ள காரணத்தினால் நீராதாரம் இல்லாமல் உள்ளது இதனால் காட்டுக் கருவேல மரங்களும் காட்டாமணக்கு மரங்களும் சூழ்ந்து காணப்படுகிறது அதுமட்டுமின்றி குளங்களுக்கு வரக்கூடிய நீர்வரத்து பகுதிகளும் தூர்ந்து போயும் முட்புதர்கள் ஆகவும் காட்சியளிக்கிறது நீர்ப்பிடிப்பு பகுதிகளை நம்பி லட்சக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய அன்னவயல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர் இவை மட்டுமல்லாது தற்பொழுது பருவமழை காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் சுற்றுவட்டார ஊராட்சிகள் முழுவதும் குடிமராத்து பணிகள் நடைபெற்று ஏரிகள் குளங்கள் நீர் ஆதாரத்திற்கு தயாராக உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு விவசாயிகள் மற்றும் ஆடு மாடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த குளங்களை பணிகளை செய்து கொடுத்தாள் விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கையாக முன் வைத்துள்ளனர்,

Related posts

Leave a Comment