தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை

 

 

தாராபுரத்தில், வாடிக்கையாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பஜாஜ் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மனித உரிமை துறை செயலாளர் செல்வராணி தலைமையில், தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து செல்வராணி கூறுகையில், கடந்த வியாழன் அன்று தாராபுரம் சார் ஆட்சியரிடம், தனியார் நிதிநிறுவனங்கள் அத்துமீறி செயல்படுவதாக கூறி, மனு அளித்திருந்தோம். அந்த மனுவிற்கு வெள்ளிக்கிழமை அன்று, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்த ஒரு தனியார் நிதி நிறுவனங் களும் வசூலில் ஈடுபடக்கூடாது என, சார் ஆட்சியர் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் தாராபுரம் சார் ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவரை, தகாத வார்த்தைகளால் திட்டியும், குண்டர்களை வைத்து மிரட்டியும், வீட்டிற்கு அடியாட்களை அனுப்புவோம் என கூறிய, பஜாஜ் பைனான்ஸ் ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். காவல்துறையினர் எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளனர். ஒரு வாரம் காத்திருப்போம், மீண்டும் இதே போன்று வாடிக்கையாளரிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டால், சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

பேட்டியின்போது மனித உரிமை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அசோக்குமார், சீனிவாசன், எழிலரசன், மற்றும் மனித உரிமை உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.

Related posts

Leave a Comment