மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா  தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா  தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடைக்கானலின்  பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்டார் கொடைக்கானலில் இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று  ஏற்பட்டுள்ளதால் கொடைக்கானல் நகர் பகுதியிலும் மற்றும் மேல் மலைப் பகுதிகளிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் கோட்டாட்சியர் சிவகுமார் வட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோரும்  மருத்துவ குழுவினரும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்  கொடைக்கானலுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி அவர்கள் அண்ணா நகர் பகுதிகளில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து தொற்று ஏற்பட்ட  பகுதிகளில்  பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வாகனத்தையும் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து நாயுடுபுரம்பகுதியில் உள்ள கொரோனா  தொற்று முகாமையும்  ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அண்ணா சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தினை  பார்வையிட்டார். பிறகு  கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுகளை குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது கோட்டாட்சியர் சிவகுமார் வட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர் நாராயணன் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பாண்டி செல்வம் சுப்பையா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடன் சென்றனர் தொடர்ந்து பல்வேறு வழிபாட்டு தளங்கள் குறித்து நகராட்சி பகுதிகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள தேவாலயங்கள் வழிபாட்டுத்தலங்கள் திறக்கலாம் என அரசு அறிவித்த நிலையில் அதனடிப்படையில்  கொடைக்கானலில் உள்ள பல்வேறு வழிபாட்டுத்தல நிர்வாகிகள்  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மனு  பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அரசிடம் பேசி உரிய. பதில்  வழங்குவதாகவும் கூறினார் தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டார். தலைமை மருத்துவர் பொன்ரதி மற்றும் மருத்துவ‌ குழுவினர் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment