ஆர் டி ஓ அலுவலகம் முன்பாக,9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

செய்யாறு ஆர் டி ஓ அலுவலகம் முன்பாக,9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆர் டி ஓ அலுவலகம் முன்பாக,9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க பொதுச்செயலாளர் பாரி கண்டன உரையாற்றினார்.
covid-19 பரவலை கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிஎம் ஏஒய், எஸ்பிஎம், ஜே ஜே எம் என்ன ஜி எஸ் மற்றும் எம் ஜி என் ஆர் ஜி இ எஸ் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பது அரசு கைவிட வேண்டும்.பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களின் மாவட்ட மாறுதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்கிட வேண்டும் கொரனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ள வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி, வந்தவாசி வட்டக்கிளை தலைவர்
.மாணிக்கவரதன்,நிர்வாகிகள்
கே.பி.பாண்டியன்,சுப்பிரமணியன்,
குமார்,காரத்திகேயன்,எம்.பி.
வெங்கடேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment