சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் தொழில் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன் ஆகிய கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் மூலம் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து வருகின்ற தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும் கடன் தரலாம்,
சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தர குழுவில் குறைந்தபட்சம் 60% சிறுபாண்மையினர் இருத்தல் அவசியம் இதன்படி கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும் ஆண்டு வருமானம் கிராமங்களில் வசிப்பவராக இருந்தால் 98,000 ரூபாயும், நகர்புறங்களில் வசிப்பவராக இருந்தால் ரூபாய் 1லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்க வேண்டும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம், மற்றும் தேனி மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தேனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஆகியவற்றில்
கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment