திருடு போன 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு உயர் ரக இருசக்கர வாகனங்கள் மீட்பு

திருடு போன 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு உயர் ரக இருசக்கர வாகனங்கள் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திருடப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்களை ஒட்டன் சத்திரம் போலீசார் மீட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரம் பகுதியில் கடந்த 14ஆம் தேதி இயற்கை செக்கு எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் முன்பதாக ஒட்டன்சத்திரம் கம்பளிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலச்சந்திரன் (22) த.பெ. முருகேசன் என்பவரது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது, இந்தநிலையில் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கரம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதேபோல கடந்த 23 ஆம் தேதி அன்று ஒட்டன்சத்திரம் புது அத்திக்கோம்பை யில் உள்ள சிவகுமார் (26) த.பெ சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் மேலும் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

கொடுக்கப்பட்ட இரண்டு புகார்களின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் சிவராஜா மற்றும் கணேசன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மூலச்சத்திரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருடிய குற்றவாளிகளான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் பாண்டியன் (26) மற்றும் நாகராஜ் (21) இருவரும் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் மேலும் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது மேலும் அவர்களிடம் இருந்த வாகனத்தை கைப்பற்றினர். மேலும் அத்திக்கோம்பை யில் உள்ள தோட்டத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் குற்றவாளியான மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த
கண்ணன் (38) அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் போலீசார் மீட்டனர்

புகார் அளிக்கப்பட்ட ஒரு சில தினங்களுக்குள் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்களையும் ஒட்டன்சத்திரம் காவல்துறை கைப்பற்றி இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,

Related posts

Leave a Comment