தாராபுரம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

அலங்கியம் காவல்துறையினர் விசாரணை

தாராபுரம், ஜூலை 29-

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கள்ளிவலசு கிராமத்தில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- உடுமலை செல்லும்  வழியில் கள்ளிவலசு என்னும் கிராமத்தில்  பள்ளிக்கூட வீதியில் ராமலிங்கம்_ மாரியம்மாள் ஆகியோரின் ஒரே மகன் சேகர் (வயது 24) இவர் அங்குள்ள ஒரு பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவருகிறார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்தது.

இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சேகருக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார்.

இன்று காலை வயிற்று வலி அதிகமாகியுள்ளது. வயிற்று வலி குறையாத காரணத்தினால் மருத்துவர் அறிவுறுத்தலின்படி அதற்குரிய மருந்தை உட்கொண்டு படுத்துவிட்டார்.

மதிய உணவிற்காக அவரது கதவு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படாததால்
மனைவி மற்றும் உறவினர்களை வைத்து வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர்.

அங்கு சேகர்
அவரது வீட்டின் விட்டத்தில் துணியை மாட்டிக்கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவந்துள்ளது.

பின்னர், கதவை உடைத்து சேகரை இறக்கி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்து மருத்துவர் இவர் மரணம் அடைந்து வெகு நேரம் ஆகிவிட்டது என தெரிவித்தனர்.

இது குறித்து அலங்கியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் கட்டிடமேஸ்திரி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment