மனைவி மரணத்தில் மர்மம்

தேனி: மனைவி மரணத்தில் மர்மம்! – கைக்குழந்தையோடு கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய நபர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிக்கண்ணன். இவர், இன்று காலை தனது 2 வயதுக் குழந்தை மற்றும் கைக் குழந்தையோடு கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்திருந்தார். அவரிடம் பேசினோம்.“என் மனைவி ராஜியை (வயது 22) இரண்டாவது பிரசவத்துக்காக, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி சேர்த்தேன். அவருக்கு உதவியாக, என் மாமியார் அவருடன் இருந்தார். என் மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நெகட்டிவ் ரிசல்ட் என வந்தது. 17-ம் தேதி அதிகாலை என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் 20-ம் தேதி வரை, பிரசவ வார்டில் இருந்தனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
அன்றைய தினமே, திடீரென என் மனைவியை மட்டும் அழைத்துச் சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் எனக் கூறி என்னிடம் ரூ.3,000 வாங்கினார்கள். முடிவில், என் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவரை கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
முன்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது குறித்து மருத்துவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு என்னுடைய மனைவி கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாகக் என்னிடம் கூறினார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடலைக் கேட்டேன். அதற்கு முதலில் மறுத்தார்கள். தொடர்ந்து உடலைப் பெற வலியுறுத்திவந்தேன். இறுதியாக 21-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என் மனைவியின் உடலை என்னிடம் கொடுத்தார்கள். பெரியகுளம் மின் மயானத்தில் உடலை அடக்கம் செய்தேன்.
முதலில் கொரோனா

Related posts

Leave a Comment