அலங்கார கூண்டில் ஒரு வித்தியாசமான பறவை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் நாச்சிமுத்து மகன் துரைசாமி அவர்களது இல்லத்தில் உள்ள அலங்கார கூண்டில் ஒரு வித்தியாசமான பறவை சிக்கியுள்ளதாக தாராபுரம் தீயணைப்பு துறைக்கு தொலைபேசி மேலும் தகவல்.தகவலின்படி தாராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று துரைசாமி இல்லத்திற்கு சென்று மேலே உள்ள அலங்கார கூண்டில் பார்க்கும்போது அது ஓர் ஆந்தை என தெரியவந்தது.பின்னர் தீயணைப்பு துறையினர் அவர்களது உபகரணங்கள் மூலமாக சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு அந்த ஆந்தையை உயிருடன் பிடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஆந்தையை தாராபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதனை ஊதியூர் அருகே உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது…

Related posts

Leave a Comment