காவு வாங்கத் துடிக்கும் ஏரி..?பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறுமா.?

காவு வாங்கத் துடிக்கும் ஏரி..

கடலூர்:  ஏரிகள் தான் மாவட்டத்தில் பெருமளவில் விவசாயத்தை செழிப்படைய வைக்கிறது
அதேநேரம் மாவட்டங்களில் நீராதார தேவையும் இதை வைத்துதான் நிறைவு செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி குடிநீர் மற்றும் பாசனத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.
ஏரி நிரம்பினால் 200 ஏக்கர் முழுவதும் பாசன வசதி பெறும் அதே நேரம் மழை பொழியும் நீர்வரத்தும் அதிகம் உள்ள பகுதி என்பதால் நீரைத் தேக்கி வைக்கும் வகையில்  ஏரியை தூர்வாரியும், மதகு பகுதியை சீரமைக்கும் பணி, குடிமராமத்து பணி  என பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதகு சீரமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.

அண்மையில் பெய்த மழையின் காரணமாக மதகு கட்டி முடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிமெண்ட் கட்டுமானப் பகுதிகள் பெயர்ந்து விழுந்துவிட்டன இதனால் மதகின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி விட்டது.
கட்டுமான பணி முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் மதகு பகுதியில் உள்ள சிமெண்ட் இடிந்து விழுந்து மதகின் நீர்த்திருக்கும் இடமானது செயலிழந்து காணப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் மதகு முறையாக சீரமைக்கப்பட வில்லை எனவும் மோசடி நடந்துள்ளதால் தான் தரம் குறைவாக கட்டப்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏரியில் முழு அளவுக்கு நீர் நிரம்பினாலும் மதகு உறுதி தன்மை இல்லாததால் அது அப்படியே வெளியேறும் இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் இதனால் ஏரியின் நீரானது பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் பெருமளவில் உட்புகுந்து பொது மக்களை பெருமளவில் பாதிப்படைய செய்யும் என கிராம மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

இப்படி குடிநீர் மற்றும் பாசன ஆதாரங்கள் பாதிப்படைய யார் பொறுப்பு இந்த விஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகம் கவனம் செலுத்தாததே காரணம் பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் உலை வைக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர், தனி அலுவலர்( கிராம வளர்ச்சி)
போன்ற அதிகாரிகளால் தான் அரசுக்கும் அவபெயர் ஏற்படுகிறது.

எனவே இனி வரும் காலங்களில் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சேப்பாக்கம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறுமா.?

#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன்

#MithranPressMediaAssociation

செய்தியாளர், K. விஜய்

Related posts

Leave a Comment