வேப்பூர் அருகே தார்சாலை அமைக்க பூமிபூஜை

வேப்பூர் அருகே தார்சாலை அமைக்க பூமிபூஜை

கடலூர் :    நல்லூர் ஒன்றியம் வரம்பனூர் ஊராட்சியில்
35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

நல்லூர் ஒன்றியம் வரம்பனூர்லிருந்து-நாரையூர் வரை 35 லட்சம் மதிப்பில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது நல்லூர் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கி பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார்,வரம்பனூர் ஊராட்சிமன்ற தலைவர் செல்வி சாமிதுரை அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், துணைத்தலைவர் முத்துலட்சுமி மணிகண்டன், செயலாளர் செல்ல வேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்..

 

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன்

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

#Mithran Press

Related posts

Leave a Comment