தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..!

தமிழ்நாட்டில், ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், எவ்வித தளர்வுகளும் அற்ற தீவிர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்

இதன்படி பால் விநியோகம், மெடிக்கல்கள், மருத்துவமனைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வேப்பூர், மங்களூர், சிறுபாக்கம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் அடைக்கப்பட்டு பொது மக்களின் ஒத்துழைப்போடு பொது மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

அவசர மருத்துவத் தேவைகளுக்கு தவிர, மற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என  வேப்பூர் காவல் ஆய்வாளர்  கவிதா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன்

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

#Mithran Press

Related posts

Leave a Comment