#சிதம்பரம்_தொகுதியில்_வன்முறை_செய்தவர்கள்_மீது_நடவடிக்கை_தேவை!!

#கோவையில்_மனிதநேய_ஜனநாயக_கட்சி_பொதுச்செயலாளர்_மு.#தமிமுன்_அன்சாரி_MLA_பேட்டி!!

கோவை:ஏப்:19., கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA, அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற வன்முறைகளை வன்மையாக மஜக கண்டிப்பதாக கூறினார். தான், விரும்புபவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஜனநாயகம் அனைவருக்கும் தந்திருக்கிறது என்றவர், விளிம்பு நிலை மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் ஒருவர், TTV தினகரன் அமமுகவின் பொதுச் செயலாளர் ஆகியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்றதும், அண்ணண் TTV தினகரன், அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். அவர் மீது எங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு என்றார்.

தேர்தல் குறித்து கருத்து கூறும்போது, தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அது 35 ஆகவும் இருக்கலாம், 37 ஆகவும் இருக்கலாம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் அவற்றை கைப்பற்றும் என்றும், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சிதான் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

பேட்டியின் போது, கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *