திருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்

திருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார் .திருப்பூர் மாநகர் பகுதியில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .

திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுகொண்டார் .இதற்கு முன்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய்க்குமார் பணி மாறுதல் ஆகி வேறு பகுதிக்கு சென்றுள்ளார் .புதிய ஆணையர் கார்த்திகேயன் இதற்கு முன்பாக கோவை சரக டிஐஜி ஆக இருந்தார் .தற்போது ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் .இதுவரை அவிநாசி பகுதி டிஎஸ்பி ஆகவும் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் எஸ்பி பதவியையும் வகித்து வந்த கார்த்திகேயன் தற்பொழுது காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார் .

பதவியேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் கார்த்திகேயன் திருப்பூர் மாநகர் பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் முக்கிய பணி ஆற்றுவார்கள் என்று கூறினார் .இவை தவிர திருப்பூர் மாநகர் பகுதியில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

Leave a Comment