குப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..!

குப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இவ்வூருக்கு தனி சிறப்பு தருவது மூன்று நதிகள் ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு, கோமுகி நதியும் கிழக்கு நோக்கிப் பாய்கிறது ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக இவை மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தளம் ஆகும்.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள் ஆனால் இங்கோ அளவுக்கு அதிகமாக ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

தற்போது கோவிலுக்கு முன்பு உள்ள மயூரநதி   ஆக்கிரமிப்புகளாலும், ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளாலும் அதன் முழு பொலிவை
இழந்து வருகிறது.

இதனால் இக்கோயிலுக்கு முன்பு உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆற்றின் இருபுறங்களிலும் கழிவுகள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதிக்கு செல்லும்பொழுது துர்நாற்றம் வீசுவதாகவும் இந்த ஆறு பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மயூரநதியை சுத்தம் செய்து ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை வேறொரு இடங்களில் கொட்டி ஆற்றை தூய்மைப்படுத்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா..?

Related posts

Leave a Comment