ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்

உத்தமபாளையத்தில் ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கூடலூர், கம்பம் ,உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி வரையில் 14, 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெற்பயிர் விவசாயம் நடைபெறும். இதற்கு முல்லை பெரியாறு பாசன நீரை முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் ஆகாத நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உத்தமபாளையம் சின்னமனூர் பகுதியிலுள்ள சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடிக்கான பணியை துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக நாற்றங்கால் அமைத்து வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து நடவுக்கு தேவையான நிலத்தை சீர்படுத்தும் பணிகளை செய்கின்றனர்.
ஆனால் முறைப் பாசனம் செய்யும் பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

தேனி நிருபர் ரமேஷ்

Related posts

Leave a Comment