அரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

வந்தவாசி மற்றும் தெள்ளாறில், அரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் தெள்ளாறில், அரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டதை திரும்ப பெறவேண்டும்.புதிய வேலை நியமன தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.கொரோனோ தடுப்பு மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்தபடி 50 இலட்ச ரூபாயும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிர்வாகிகள் புருஷோத் கார்த்திகேயன் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி பரணீதரன், யோகாநந்தம், வெங்கடேசன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment