செய்யாறு அருகே வாழ்குடை,செங்காடு,கொருக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

செய்யாறு அருகே வாழ்குடை,செங்காடு,கொருக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு 1கோடியே 31 இலட்சத்து 70 ஆயிரம் கடன் உதவி- செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் வழங்கினார் .

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாழ்குடை, கொருக்கை, செங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் , வி.எல்.தனி வாழ்குடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கோவிட் கடனுதவியாக 17 குழுக்களை சேர்ந்த 213 நபர்களுக்கு 10 இலட்சத்து 65 ஆயிரமும், நேரடி கடனாக 17குழுக்களை சேர்ந்த 208நபர்களுக்கு 85 இலட்சமும், வி.எல் தனி 204 செங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்சார்பில், 5 மகளிர் குழுக்களை சேர்ந்த 67 நபர்களுக்கு நேரடி கடன் உதவியாக 30 இலட்சமும், வி.எல்.தனி கொருக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கோவிட் கடனுதவியாக 10 மகளிர் குழுக்களுக்கு 6 இலட்சத்து 5 ஆயிரம் ஆக 1கோடியே 31இலட்சத்து 70 ஆயிரம் வழங்கினார்..

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசீலன், செய்யாறு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மகேந்திரன், மாவட்ட கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரமேஷ், ஒன்றிய மாணவர் அணி துரை, கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் தாமரைக்கண்ணன், தயாளன், கிருஷ்ணமூர்த்தி செயலாளர்கள் ராஜேந்திரன்,சேகர், ஏழுமலை மற்றும் இயக்குனர்கள் உடன் இருந்தனர் .

Related posts

Leave a Comment