கேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை.

கேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை.

கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பித்ததை அடுத்து கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழையும் கேரள எல்லையான வேலந்தாவளம் அருகே உள்ள பிச்சனூர் பகுதி சோதனைச்சாவடியில் எஸ். எஸ். ஐ.ரமேஷ் குமார் அவர்கள் தலைமையில், தீவிரமாக சோதனை நடைபெற்று வருகின்றது. சோதனையின்போது உரிய ஆவணம் ,இ பாஸ், மருத்துவச் சான்றிதழ், ஆகியவை சரிபார்க்கப்பட்டு, பின்னரே கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சோதனைக்கு உதவியாக மருத்துவகுழு, மற்றும் வருவாய் துறையினர் இருக்கின்றார்கள். மருத்துவத்துறை டாக்டர் பவித்ரா அவர்கள் தலைமையில், ஒரு நடமாடும் மருத்துவ
சோதனை
வாகனம் சோதனைச்சாவடி அருகே வைக்கப்பட்டு, சந்தேகப்படும் நபர்களுக்கு, அங்கேயே சோதனை நடத்தப்படுகின்றது. வருவாய்துறை அதிகாரிகள், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்
சிவகாமி,
மற்றும் உதவி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், வழுக்குப்பாறை ஊராட்சி செயலாளர் நாராயணசாமி, உட்பட பலரும் இந்த சோதனைக்கு உறுதுணையாக இருந்து, கோவைக்குள் கொரோனா நோயாளிகள், நுழையவிடாமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். அந்தப் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போதும் சோதனையினை மிகச் சரியான முறையில் செய்து, மழையை பொருட்படுத்தாமல், பணியாற்றியதை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Related posts

Leave a Comment