தேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்..

தேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள சிலோன் காலனியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை தொற்றா நோய்களுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கணிராஜா தலைமையில் நடைபெற்றது .இந்த முகாமில் முதியவர்களை கொரனோ தொற்று மற்றும் ஏனைய நோய்களிலிருந்து பாது காக்கும் முகாம் ஆக நடைப் பெற்றது.

இந்த முகாமில்வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் மருத்துவர் உமா, ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவானது முகாமிற்கு வந்திருந்த அணைவருக்கும் நீரிழிவு, இருதய நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன மேலும் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொள்ளும் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், மாதம் ஒருமுறை இரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும், தினமும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றை செய்ய வேண்டும் என்றும் புகைப்பழக்கங்கள் மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களை விட வேண்டும் என்றும், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு மிகுந்த உணவுகள், ஊறுகாய், அப்பளம், கருவாடு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், அறிவுரைகளைக் சுகாதாரத்துறையினர் மூலம் முகாமுக்கு வந்த அனைவருக்கும் அறிவுரை கூறப்பட்டது.

இந்த முகாமில் கிராம பகுதி செவிலியர் ருக்குமணி, சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் திருமலாபுரம் வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரன் கலந்துகொண்டனார். மேலும் இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தேனி நிருபர் ரமேஷ்

Related posts

Leave a Comment