7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி ரூபாய் 9 லட்சம் முதல்வர் மற்றும் கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் வழங்கப்படுமென தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் ஏழு வயது சிறுமி வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன நிலையில் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் தீவிரமாக தேடியே வந்த நிலையில் மோப்பநாய் உதவியோடு சிறுமியின் உடலை கண்டறிந்தனர். இதனையடுத்து கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை கொல்லப்பட்ட சம்பவம் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக ராஜேஷ் என்பவரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றன. மேலும் ஒருவரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் இரங்கல் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment