விசிக கட்சி சார்பில் மௌன அஞ்சலி.!

விசிக கட்சி சார்பில் மௌன அஞ்சலி.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர்நகர் விசிக முகாம் சார்பில் அரசியல் உரிமையை வென்றெடுக்க உயிர் நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் கழகம் மாநில துணைச் செயலாளர் பா.ரா.நீதிவள்ளல், நல்லூர் ஒன்றிய செயலாளர் எல்.சந்தோஷ், ஒன்றிய வணிகரணி அமைப்பாளர் பழக்கடை பிரகாஷ், முகாம் நிர்வாகிகள் செல்வமணி, கதிர்வேல், ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், மணி, ஆறுமுகம், சரவணன், அருண்குமார், ராமதாஸ், மதியழகன், பிரசாந்த், பாரதிராஜா, ஆதி, தேவா, அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதி காக்க உயிர் தியாகம் செய்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்..

Related posts

Leave a Comment