ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது

பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன். பிரேம்நாத் தலைமை தாங்கினார் முதன்மை விருந்தினராக ரொட்டேரியன் சௌந்தரராஜன் மற்றும் செயலாளர் பழனியப்பன் மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு செந்தில்குமார் ஆனந்த் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் அரசு மருத்துவமனையின் ஏனைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் உதய குமார் முன்னிலை வகித்து பழனி ரோட்டரி சங்கத்தின் இந்த உதவிக்கு தனது அரசு மருத்துவர்களுடன் இணைந்து நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment