அதிமுக நிர்வாகிகளுக்கு கொரோனோ நிவாரண உதவி

வந்தவாசியில், அதிமுக நிர்வாகிகளுக்கு கொரோனோ நிவாரண உதவி-மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ வுமான தூசி மோகன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளை சந்தித்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் தன் சொந்த செலவில் கொரோனோ நிதிஉதவி வழங்கினார்.
அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனோ நிதிஉதவி வழங்கிய மாவட்ட செயலாளர் தூசி மோகன், கொரோனோ தாக்கம் அதிகமாவதால்,பாதுகாப்பாக இருக்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது, எம்.ஜி ஆர் மன்றம் ஜே.பாலுமுதலியார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.ஏ லோகேஷ்வரன், அர்ஜுனன், பச்சையப்பன்,தங்கராஜ் , திருவண்ணாமலை 22வது வார்டு மாவட்ட கவுன்சிலர் கஸ்தூரி ஏகாம்பரம் , கலையரசு, மற்றும் நகர செயலாளர் ஓட்டல் பாஷா,அம்மா பேரவை மேகநாதன், ராஜசேகர், பந்தல் சேகர், ராஜஷ்கண்ணா, சென்னாவரம் விஜய், ராஜேஷ்,சையத் கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

(வந்தவாசி நிருபர் தசரதன்)

Related posts

Leave a Comment