ஐசிஐசிஐ வங்கி, ரூ. 1 கோடி வரை கல்விக் கடனுக்கு உடனடி ஒப்புதல் வழங்குகிறது!

ஐசிஐசிஐ வங்கிரூ. 1 கோடி வரை கல்விக் கடனுக்கு உடனடி ஒப்புதல் வழங்குகிறது!

 

·         இந்தியாவில் இந்தச் சலுகையை வழங்கும் முதல் வங்கி ஐசிஐசிஐ வங்கி

·         உலகெங்கிலும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க இந்தக் கடன் கிடைக்கிறது

·         முழுவதும் டிஜிட்டல் நடைமுறை

 

சென்னைஜூன் 2020:- உலகெங்கிலும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தாங்கள் படிக்க அல்லது தங்களின் குழந்தைகள்உடன்பிறப்புகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு உயர் படிப்புகளைப் படிக்ககடன் வழங்குவதற்காக ரூ. 1 கோடி வரை கல்வி கடன்களுக்கு உடனடி அனுமதியைப் பெற வாடிக்கையாளர்களுக்கு ஒரு வசதியை வழங்கும் நடைமுறையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. ‘இன்ஸ்டா எஜுகேஷன் லோன்’ (உடனடி கல்விக் கடன்என்று அழைக்கப்படும் இந்தத் துறையிலேயே முதலாவதான இந்த வசதிமுன் அங்கீகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குவங்கியில் அவர்கள் வைத்திருக்கும் நிலையான வைப்புகளுக்கு எதிராக முழுமையான டிஜிட்டல் நடைமுறையில் கல்விக் கடன்களைப் பெற உதவுகிறதுஅவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த கல்வி நிறுவனத்திற்கு அனுமதிக் கடிதத்தை வழங்க முடியும்.

 

உடனடி கல்விக் கடன்’ வசதி வாடிக்கையாளர்களின் வசதியை கணிசமாக மேம்படுத்துகிறதுஏனெனில் அவர்கள் இப்போது வங்கியின் இணைய வங்கி தளத்தைப் பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளில் அனுமதி கடிதத்தைப் பெற முடியும்பொதுவாகஒரு வாடிக்கையாளர் கல்விக் கடனுக்கான அனுமதிக் கடிதத்தைப் பெறுவதற்கு சில வேலை நாட்கள் ஆகும்மேலும்வங்கிக் கிளைக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதுடன் ஏராளமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்உடனடி கல்விக் கடன் திட்டத்தில் அந்த சிக்கல்கள் ஏதும் இல்லை.

 

இந்தப் புதிய வசதி குறித்து ஐசிஐசிஐ வங்கியின் பாதுகாப்பற்ற சொத்துக்கள் பிரிவின் தலைவர் சுதிப்தா ராய் கூறுகையில், “லட்சக்கணக்கான ஆர்வமுள்ள மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாககல்வி கடன்களுக்கான உடனடி அனுமதி கடித ஒப்புதலை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்வங்கியில் வைத்திருக்கும் நிலையான வைப்புகளின் அடிப்படையில் இந்தக் கடன் ஒப்புதல் வழங்கப்படும்மாணவர்கள் இப்போது தங்கள் நிதித் தேவைகள் பற்றிக் கவலைப்படாமல் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களின் விண்ணப்ப செயல்முறையை மேற்கொள்ள முடியும்அவர்கள் பெற்றோருடன் இணைந்து டிஜிட்டல் நடைமுறையில்எந்தவிதமான காகித நடைமுறையும் இன்றி இந்த கடன் ஒப்புதல் வசதியைப் பெறலாம்இந்த வசதியானது அனுமதி கடிதத்தைப் பெற சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் இருந்து சில நிமிடங்களில் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துகிறதுவாடிக்கையாளர்கள் தங்களின் நிலையான வைப்பு / சேமிப்புகளை எந்த விதத்திலும் எடுக்காமல் உயர் படிப்புகளுக்குக் கடன் பெற முடியும் என்பதால் இந்த வசதி நிச்சயமாக அவர்களுக்கு மிகுந்த வசதியைக் வழங்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

 

உடனடி கல்விக் கடன்’ திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:

·         உடனடி அனுமதி:

வாடிக்கையாளர்கள் கிளைக்கு நேரில் செல்லாமல் மின்னஞ்சல் மூலம் உடனடியாக ஒப்புதல் கடிதத்தைப் பெற முடியும்.

·         வளைந்து கொடுக்கும் தன்மை:

வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகள்உடன்பிறப்புகள்பேரக் குழந்தைகள் அல்லது தமக்காக வங்கியில் தங்கள் நிலையான வைப்புகளின் மதிப்பில் 90% வரை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

·         பரந்த அளவிலான கடன் தொகை:

 சர்வதேச நிறுவனங்களில் படிக்க அனுமதி பெறும் மாணவர்களுக்குகடன் தொகை ரூ .10 லட்சம் முதல் ரூ .1 கோடி வரை கிடைக்கும்உள்நாட்டு நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த தொகை ரூ .10 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை வழங்கப்படும்.

·         விண்ணப்பிக்க எளிதானது:

வாடிக்கையாளர்கள் ஒரு சில கிளிக்குகளில் வங்கியின் இணைய தள வங்கிச் சேவை மூலம் கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்வு செய்யலாம்திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை என்பது குறிப்பிடத்தக்கது.

·         வரிச் சலுகைகள்:

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80  படிவருடாந்திர வரிவிதிப்பு வருமானத்திலிருந்து 8 ஆண்டுகள் வரை ‘உடனடி கல்வி கடன்’ தொகைக்கு முழு வட்டி செலுத்த அனுமதிக்கப்பட்டு அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

 

கீழே உள்ள சில எளிய நடைமுறைகள் மூலம் வாடிக்கையாளர்கள் எளிய முறையில் கடன் அனுமதியைப் பெறலாம்:

 

1.       உள்நுழைக:

வாடிக்கையாளர்கள் வங்கியின் இணைய தளத்திற்குள் நுழைந்து முன்பே அங்கீகரிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்கலாம்

2.       கடன் விவரங்களை உள்ளிடவும்:

கடன் தொகைதிருப்பிச் செலுத்தும் காலம்கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் படிப்புச் செலவு போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்கால்குலேட்டர் எனபப்டும் கணினி தானாகவே சரிவிகித மாதாந்திர தவணை (இஎம்ஐ – EMI) விவரங்களைக் காண்பிக்கும்.

3.       மாணவர் விவரங்களை உள்ளிடுக:

மாணவரின் பெயர்பிறந்த தேதி மற்றும் மாணவருடனான உறவு போன்ற<span l

Related posts

Leave a Comment