சிவகாசி:பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வை கொண்டாடுவோம் நிகழ்ச்சி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் நாளை முதல் நடைபெற உள்ளது.பிளஸ் 2 பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி , தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வை கொண்டாடுவோம் எனும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நடந்த இந்நிகழ்ச்சியில் விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். இந்தாண்டு நடைபெறும் நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகிக்கிறார். பி.எஸ்.ஆர்., கல்வி குழும தலைவர் சோலைச்சாமி முன்னிலை வகிக்கிறார். நடிகர் தாமு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார். நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் மற்றும் பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் இணைந்து நடத்துகிறது. பயிற்சிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்லுாரி சார்பில் தேநீர், மதிய உணவு, பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. விரும்பும் மாணவர்கள் 80125 31321-2 ,4,5 என்ற அலைபேசியை தொடர்பு கொள்ளவும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.