பொதுமக்கள் தங்கள் கோரிக்கை நேரில் வராமல் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம்,

 

 

 

கோரிக்கை மனுக்களை அனுப்புங்கள் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்போது நடத்தப்படவில்லை எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வராமல் yseccoll.tnpdk@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் மேலும் Covid-19 தொடர்பாக வேறு இதர கோரிக்கை மனுக்களை pag.pdkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment