ஸ்ரீவில்லிபுத்துார் சேவாபாரதி அமைப்பின் சார்பில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல்குளத்தில் உழவாரப்பணி துவக்கவிழா நடந்தது.சேவாபாரதி அமைப்பின் மாநில தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். திருப்பாற்கடல் திருப்பணி குழு நிர்வாகி குருசாமி வரவேற்றார். எம்.எல்.ஏ.,சந்திரபிரபா துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், தாசில்தார் கிருஷ்ணவேணி பங்கேற்றனர். சேவாபாரதி மாரிச்சாமி நன்றி கூறினார்.