விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பான்கள் காலாவதியாகியும், பல்வேறு பொருட்கள் பராமரிப்பின்றி கிடப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களில் தியணைப்பான்கள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை ஏ, பி, சி. சிஓ2 என நான்கு வகைப்படும். ஏ – ஆனாது திரவ தீயணைப்பான் . மரம் போன்ற எரிந்து சாம்பலாக கூடியவற்றை அணைக்கும். நுரை தீயணைப்பானான பி பெட்ரோல், ஆயில் வகை தீயை அணைக்கும். டிரை கெமிக்கல் பவுடர் வகை தீயணைப்பானான – சி கியாஸ் சிலிண்டர், இரும்பு ஆலைகளில் ஏற்படும் தீயை அணைக்கும். சி.ஓ2., என்பது மின்கசிவால் ஏற்படும் தீயை அணைக்கும். கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலும் சி வகை தீயணைப்பான்கள் உள்ளன. ஏ,பி,சி , தீயணைப்பான்களை ஆண்டிற்கு ஒரு முறை ரீபில் செய்ய வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் 30 க்கு மேற்பட்ட தீயணைப்பான்கள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட தியணைப்பான்கள் 2015, 2018 ம் ஆண்டுகளிலே காலாவதி ஆகிவிட்டன. ஆண்டுக்கு ஒரு முறை ரீபில் செய்யப்படுவதும் இல்லை. ரீபில் செய்யப்படாத தீயணைப்பான்கள் தீயை அணைக்காது. அதன் வீரியத்தன்மையை இழந்துவிடும்.ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு சுகாதார குறைபாடுகள், கழிப்பறை துர்நாற்றம் இருப்பதாக பொதுமக்கள் புகாரளிக்கின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு உபகரணங்களும் வெறும் காட்சி பொருளாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தீயணைப்பான்களை ரீபில் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஏப்ரலில் ஆய்வு செய்து கலெக்டர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பித்தோம். பழைய மாடல் தீயணைப்பான்களையும் அகற்றும் படியும் அறிவுறுத்தி இருந்தோம். மீண்டும் இதற்கான நடவடிக்கைகளை