பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 3வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி பூமாரி,35, இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. மாரிமுத்து கோயம்புத்துார் குனியமுத்துாரில் 16 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். பூமாரி அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரில், நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த போது பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் 23, கார்த்தி 23, இருவரும் தன்னை காரில் கடத்திச் சென்று பைபாஸ் ரோடு அருகே உள்ள காட்டு பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, கூறியுள்ளார். கண்ணன், கார்த்தியை போலீசார் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment