கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அனைவரையும் சிரிக்க வைக்கும் கிரேஸி மோகனின் மறைவு திரை உலகம் மற்றும் மேடை நாடக உலகுக்கு பேரிழப்பு என கூறியுள்ளார்.

நடிகர் கிரேஸி மோகன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் எனவும், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரித்து கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார். தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கிரேஸி மோகன் என புகழாரம் சூட்டினார். கிரேஸி மோகன் இழப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது எனவும் கூறினார்.

Related posts

Leave a Comment