தரமற்ற சாலையை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்..?

தரமற்ற சாலையை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்..?

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் இருப்பு ஊராட்சி உட்பட்ட கோவிலாங்குப்பம் குக்கிராமம் உள்ளது.
இங்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் கிருத்துவ சமுதாய மக்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் பெரும்அளவில் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் வழியாக ஆலடி, மணக்கொல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்கள் இச்சாலையை பணிக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மணக்கொல்லை-மேற்கிருப்பு செல்லும் இந்த சாலையை பயன்படுத்தி இந்த வழியாக கோவிலாங்குப்பத்தை கடந்து அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பணியாளர்கள் என நெய்வேலிக்கு செல்வதற்கு இது பிரதான சாலை ஆகும்.

கோவிலாங்குப்பத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் தங்களின் உயர்கல்வி தொடர்வதற்காக ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த மோசமான சாலையை கடந்து செல்கின்றன.
சமீபத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கிவரும் BSNL நிறுவனமானது தங்கள் நிறுவனத்திற்காக கேபிள் வயர்களை புதைப்பதற்கு இச்சாலை இருபுறமும் தோண்டப்பட்டு பிறகு மூடப்பட்டது. இதனால் இந்த சாலை மிக மோசமாக கற்கள் பெயர்ந்தும், புழுதிப் படர்ந்தும் காணப்படுகிறது.
இதனால் ஊர் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதற்கு அச்சப்படுகின்றனர்.

இப்பகுதியில் உள்ளவர்கள் பணிக்கு செல்லவும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் இந்த சாலையில் அடிக்கடி பெரும் விபத்துகளும் உயிர்ச் சேதங்களும் ஏற்படுகிறது
இதனிடையே இக்கிராம பொதுமக்கள் இந்த சாலையின் மீது தனி கவனம் செலுத்தி சீரமைத்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு செய்வார்களா.?

Related posts

Leave a Comment