கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு வலுவான படிகள் தேவை என்பதை உணர்ந்து ஜீ செயல்பட்டு வருகிறது.

கோவிட் – 19 க்கு எதிராக போராடுவதற்காக ஜீ எண்டெர்டெயிண்மெண்ட் குழுமம், 200 ஆம்புலன்சுகள், 40 ஆயிரம் பாதுகாப்புக் கவச உடைகளை நன்கொடையாக வழங்குகிறது: நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது ஜீ எண்டெர்டெயிண்மெண்ட் குழுமம்!!

 

 

  • 46 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 உயர் ஓட்டம் சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றை பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (பி.எம்.சி) நன்கொடை அளித்துள்ளதன் மூலம் மும்பைய சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளில் ஜீ எண்டெர்டெயிண்மெண்ட் குழுமம் பங்கெடுத்து செயல்படுகிறது

 

 

 

  • நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு 6,00,000 உணவு ஏற்பாட்டுடன் 10 ஆயிரம்  புலம்பெயர்ந்தோருக்கு உணவளிக்கிறது ஜீ நிறுவனம்.

 

 

சென்னை, ஜுன் 15, 2020:- ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் முன்னணியில் (ZEE) உள்ள எண்டெர்டெயிண்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEE) இன்று நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான தனது பெருநிறுவன பொறுப்புணர்வு செயல்பாட்டு (சிஎஸ்ஆர்) நடைமுறை அடிப்படையில், கோவிட் -19 க்கு எதிரான அதன் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

நிறுவன வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக பொறுப்புணர்வு கொள்கைக்கு ஏற்ப, நிறுவனம் 10 நகரங்களில் முக்கியமான அம்சங்களில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். மும்பை, நொய்டா, சண்டிகர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ளும்.

 

அனுமதிக்கப்பட்ட சி.எஸ்.ஆர் நிதி ஒதுக்கீட்டை (கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு) நிறுவனம் பின்வருவனவற்றுக்காகப் பயன்படுத்தும்:

 

 

  • ஆம்புலன்ஸ்கள் – 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மாநகராட்சி நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் (46 ஆம்புலன்ஸ் ஏற்கனவே பிரிஹன் மும்பைக்கு (பி.எம்.சி) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது).
  • ஹுமிடிஃபையர்ஸே (ஈரப்பதமூட்டிகள்) – பிரிஹன் மும்பைக்கு (பி.எம்.சி) நன்கொடையாக 50 உயர் ஓட்ட சுவாச ஈரப்பதமூட்டிகள் வழங்கப்படுகிறது.
  • பிபிஇ (தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்) கருவிகள் – நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நிறுவனங்களுக்கு 40,000க்கும் மேற்பட்ட தனி நபர் பாதுகாப்பு கவச தொகுப்புகள் நன்கொடையாக வழங்கப்படும்.
  • சிறிய (போர்ட்டபிள்) ஐ.சி.யூக்கள் – 100க்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ஐ.சி.யூ அலகுகள்) நாடு முழுவதும் அதிநவீன தொழில்நுட்ப ஆதரவுடன் கட்டப்பட உள்ளன.
  • தினசரி உணவு – 10,000-க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்களுக்கு 600,000 உணவு வழங்கப்படும்.

 

 

மகாராஷ்டிரா மாநில அரசின் ஆதரவோடு, கோவிட் -19 க்கு எதிரான தேசிய அளவிலான நடவடிக்கையை தனது சி.எஸ்.ஆர் இயக்கத்தின் மூலம் மும்பையில் இருந்து ஜீ நிறுவனம் தொடங்கியுள்ளது, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா உத்தவ் தாக்கரே மற்றும் ஜீ எண்டர்டெயிண்மெண்ட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புனித் கோயங்கா ஆகியோர் முன்னிலையில் 46 ஆம்புலன்ஸ் மற்றும் 50 உயர் ஓட்ட வெப்ப சுவாச ஈரப்பதமூட்டிகள் பிரிஹன் மும்பை (பி.எம்.சி.) மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த ஆதரவு மும்பையில் தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் உதவும்.

 

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கட்டமைக்கப்பட்ட ஒரு செயல் திட்டத்தை வகுக்க, ஜீ நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். 

 

சுகாதார மேம்பாட்டு உதவி தவிர ஜீ நிறுவனம், அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்து 600,000 தினசரி உணவை வழங்குகிறது. இது ஒரு மாதத்திற்கு நாடு முழுவதும் 10,000 புலம்பெயர்ந்தோருக்கு உதவும்.

 

இந்த அறிவிப்பு பற்றி, ஜீ நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியுமான புனித் கோயங்கா கூறுகையில், “இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் பலர் உள்ளனர். இதுபோன்ற காலங்களில் நாம் சமூகத்தின் பொறுப்பான உறுப்பினர்களாக நமது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தி, இந்த தொற்றுநோயிலிருந்து நமது தேசத்தை காப்பாற்றுவதற்காக, அரசாங்கத்திற்கு அதன் வலுவான ஆதரவைத் தொடர ஜீ உறுதிபூண்டுள்ளது. நாடு முழுவதும் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளையும் நாங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறோம். இந்த சவாலான காலங்களில் தேசத்திற்கு சேவை செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்.” என்றார்.

 

மகாராஷ்டிரா அரசாங்கத்தின் சுற்றுலா, சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யுதாவ் தாக்கரே கூறுகையில், “இந்த தொற்றுநோயின் தாக்கம் மிகப்பெரியது. மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும், களத்தில் முன்னணியில் செயல்படும் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மகாராஷ்டிரா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போதைய நெருக்கடியை முறியடிப்பதற்கான ஒரு வெற்றிகரமான படி இதுவாகும். கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்த நேரத்தில் உதவியதற்காக புனித் கோயங்கா மற்றும் ஜீ நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்.” என்றார்.

 

பிரிஹன் மும்பை மாநகராட்சி ஆணையர் (பி.எம்.சி கமிஷனர்) இக்பால் சிங் சாஹல் கூறுகையில், “கோவிட் -19 க்கு எதிரான போரில் சவாலான நேரத்தில் நாம் உள்ளோம். பாதிப்புகளின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக நகரம் முழுவதும் தொற்று பாதிபபுச் சங்கிலியை உடைக்கும் புதுமையான நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். மேலும் மருத்துவ வசதிகளை அதிகரித்து வருகிறோம். ஜீ நிறுவனத்திடமிருந்து இந்த ஆதரவைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும், அதே நேரத்தில் குடிமக்களின் நல்வாழ்வையும் உறுதி செய்யும். ஜீ போன்ற நிறுவனங்கள் எங்களுடன் சேர்ந்து இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது நம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்றார்.

 

முன்னதாக, ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், நிறுவனத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியாற்றும் 5000-க்கும் மேற்பட்ட தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு நிதி உதவியை ஜீ அறிவித்தது. நிறுவனம் தனது 3400 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பிரதமரின் நிவாரண (PM CARES) நிதிக்கு பங்களிக்க ஊக்குவித்தது. பெறப்பபட்ட தொகை ஜீ நிறுவனத்தால் பெறப்பட்டு கூட்டுத் தொகை பிரதமரின் நிவாரண (PM CARES) நிதிக்கு மாற்றப்பட்டது. ஒரு பொறுப்பான ஊடக மற்றும் பொழுது போக்கு நிறுவனமாக, ஜீ தொடர்ந்து செயல்படுகிறது. கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு வலுவான படிகள் தேவை என்பதை உணர்ந்து ஜீ செயல்பட்டு வருகிறது.

Related posts

Leave a Comment