நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் பொள்ளாச்சி தாலுக்கா பகுதிக்குட்பட்ட ஆனமலை வட்டாரப் பகுதி மற்றும் பொள்ளாச்சி தெற்கு வட்டாரப் பகுதி ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ எஸ் பாபு அவர்கள் தலைமை தாங்கினார் . சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர்  வி நந்தகுமார் வழக்கறிஞர், ஆனைமலை வட்டார தலைவர் வரதராஜ்,  முன்னிலை வகித்தார் .

மற்றும் இந்த கூட்டத்திற்கு கோவை மாவட்ட செயலாளர் நெகமம் சண்முகம் , தெற்கு வட்டார தலைவர் அருணகிரி  மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் .

ஆலோசனைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது ,தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தை தனியார்மயம் ஆக்கக்கூடாது என்றும் விவசாயிகள் விளைவிக்கும் விலை பொருள்கள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தென்னக நதிநீர் இணைப்பை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அணைத்து வங்கிகளில் இருந்து வாங்கிய அனைத்து விவசாய கடன்களும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேலும் தமிழக விவசாயிகள் தென்னை பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்கும் உரிமையை தமிழக அரசு உடனடியாக சட்டம் நிறைவேற்றி விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

Leave a Comment