இலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை

இலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA கப்பல் மூலம் இன்று 713 பயணிகள் வந்துள்ளனர்.
கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக இலங்கை நாட்டில் 2 மாதமாக தவித்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் சேர்ந்தவர்களை இன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு ஆபரேசன் சேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல் INS JALASHWA என்ற கப்பல் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த கப்பல் இன்று 713 பயணிகளுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இன்று காலை வந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் 57 நபர்கள், திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவர்கள் 10 நபர்கள், மற்றும் ஆந்திரா கேரளா ,கர்நாடகா , பிற மாநிலங்களை சேர்ந்த என மொத்தம் 713 பயணிகள் வந்துள்ளனர். முன்னதாக துறைமுகத்திற்கு வந்த பயணிகளை துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், இ ஆப மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ ஆப ,மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.  பின்பு பயணிகளின் உடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்து அவர்கள் கொண்டு வந்த பொருள் அனைத்திலும் கிருமி நாசினி தொளிக்கப்பட்டது
பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் அவர்களை 25 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்ப வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு காலை உணவு பேருந்துகளில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபால் இ.கா.ப ,மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இஆப, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் இஆப,, சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் இஆ ப, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல் குமார் ஜா, இ ஆப, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ் இஆப, துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார்,
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு. மரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி’.தனப்ரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், . மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், டிராபிக் மேனே ஜர் பிரபாகர் , வட்டாட்சியர்கள் ரகு, சந்திரன் , .துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணா லிலா, மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பார்த்திபன், தூத்துக்குடி நகர நல அலுவலர் டாக்டர் அருண்குமார் தூத்துக்குடி வ உ சி துறை முக மக்கள் தொடர்பு அலுவலர் சசி குமார், தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சினிவாசன், உதவி செய மக்கள் தொடர்பு அலுவலர் செய்யது முகமது மற்றும் வ.உ சி துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613